• May 04 2024

சின்ன வயசு தானே ஆகுது அதுக்குள்ள அரசியலுக்கு வரனுமா?- விஜய்யை வம்புக்கு இழுக்கும் கே. ராஜன்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் விஜய். இவர் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார். இப்படத்தைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது.அவர் அரசியலில் இணையப் போவதால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னமும் நடிகர் விஜய் அறிவிக்காத நிலையிலும், நெருங்கிய வட்டாரங்கள் கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார் எனக் கூறி வருகின்றனர்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க தியேட்டர்களில் சினிமா படங்களின் டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்த தியேட்டர் அதிபர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே டிக்கெட் கட்டணம் 120 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு மேல் உள்ள நிலையில், பாப்கார்ன் விலை முதல் பார்க்கிங் கட்டணம் வரை ஒரு நபர் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விட்டு வர 500 முதல் 700 ரூபாய் ஆகிறது என்றும் ஒரு குடும்பம் படத்துக்கு சென்று வந்தால் 2000 ரூபாய் ஆகிவிடுகிறது என புலம்பி வரும் நிலையில், 400 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலையை அதிகரித்தால் தியேட்டருக்கே ரசிகர்கள் வரமாட்டார்கள் என்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் காத்தவராயன், காந்தர்வன் படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி உள்ள 'கடத்தல்' படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது.அதில், கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போவதாக சொல்கின்றனர். ஆனால், அவர் படத்தின் டிக்கெட் விலையே 1000 ரூபாய்க்கு முதல் நாளன்று விற்கப்படுகிறது. 


மேலும், சினிமா டிக்கெட்டுகளின் விலை கடுமையாக உயரப்போவதையாவது அவர் தடுப்பாரா? இளம் வயசு தானே ஆகுது விஜய்க்கு இன்னும் கொஞ்சம் காலம் நடிக்கலாமே? அவர் அரசியலுக்கு வந்தால் ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் தான் உள்ளது என நடிகர் விஜய்யை தயாரிப்பாளர் கே. ராஜன் சீண்டிப் பேசியுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement