• Apr 27 2024

வாரிசைப் போல லியோ படத்தோடும் மோத வேண்டுமா?- ஏகே 62 படக்குழுவினருக்கு அஜித் வைத்த கோரிக்கை- மீண்டும் அடிதடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் அடுத்த படமாக ஏபே 62 படத்திற்காக படக்குழுவினர் தீவிரமாக ஸ்கிப்ட் தயாரித்து வருகின்றனர்.மகிழ்திருமேனி ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம். 

 ஒவ்வொரு காட்சியும் அருமையாக வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறாராம் அஜித். காட்சிகளை மாற்றவும் சொல்கிறாராம். இதனால் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை எப்படி முடிப்பது என மகிழ் திருமேனி விழிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு விஷயத்தையும் அவரிடம் கூறினாராம் அஜித்


படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து விஜய்யின் லியோ படத்துடன் நம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என மகிழ்திருமேனியிடம் அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


 லியோ படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது லியோவுடன் அஜித் படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பே இல்லை. அது அஜித்துக்கும் தெரியும். அதனால் லியோ ரிலீஸுடன் நம் பட ரிலீஸ் இருக்கணும் என அஜித் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாத இறுதிக்குள் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்யாவிட்டால் மகிழ்திருமேனியை மாற்றிவிடலாம் என்று இருக்கிறாராம் அஜித். அதனால் தான் அஜித்-மகிழ்திருமேனி படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் காலதாமதம் செய்கிறது லைகா நிறுவனம் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement