• May 06 2024

யாரை ஏமாற்றுறீங்க... தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் பயப்பிடும் பிரபலங்கள்... எதனால் தெரியுமா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷாவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது.


இந்த ஷோவில் பங்கேற்பவர்கள் எளிதில் பிரபலமாகி விடுவர். அத்தோடு சர்ச்சைகளில் சிக்கி வருவதும் வழமை. அந்தவகையில் பிக்பாஸ் பிரபலமாக திகழ்ந்து வந்த மீரா மிதுன் வெளியே வந்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படு ஆபாசமாக ட்வீட்களை போட்டு சிக்கலில் சிக்கி இருந்தார்.


அதிலும் குறிப்பாக கடைசியில் பட்டியலினத்தவர் பற்றி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியாத அளவிற்கு தலைமறைவாக உள்ளார்.

அதேபோன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என பேசி வந்த விக்ரமன் பெண்கள் மேட்டரில் சிக்கி பெரும் சர்ச்சை வலையில் மாட்டி இருக்கின்றார்.


இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அதாவது நிகழ்ச்சியில் நல்ல போட்டியாளர்களை தேர்வு செய்யுங்க என்றும் டிஆர்பிக்காக கிரைம் ரேட் போட்டியாளர்களை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறாக பிக்பாஸ் பிரபலங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்ற நிலையில் ஒரு சில நடிகர்கள், மற்றும் நடிகைகள் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் வர முடியாது என்று தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement