• May 02 2024

பொய்கால் குதிரையில் பிரபுதேவாவின் மகளாக நடித்திருப்பது யார் தெரியுமா?- சூப்பராக நடிச்சிருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை. இப்படத்தில் பிரபு தேவா கதாநாயகனாக நடித்துள்ளதோடு இவருடன் பிரகாஷ்ராஜ், வரலட்சுமி, ஜெகன், ரைசா வில்சன், ஜான் கொக்கேன், போன்ற பலரும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் குழந்தை கடத்தல் மையமாக வைத்து ஒற்றை காலில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார் . குழந்தையின் படிப்புக்காக பணம் சேர்த்து வைக்கும் பெண் பிள்ளைக்கு அப்பாவான பிரபுதேவா, அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தனது படிப்பை விட அப்பாவின் கால் தான் முக்கியம் என்று நினைக்கும் குழந்தை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்து செயற்கைக் கால் பொருத்தும் படி கூறுகிறார்.

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கதையில் குழந்தை காணாமல் போக, எவ்வாறு தனது குழந்தையை கண்டுபிடிக்கிறார் அதற்கான என்னென்ன பிரச்சினைகளை சமாளிக்கிறார் என்பதே பொய்க்கால் குதிரையின் கதை.

இந்த படத்தில் பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் குட்டி குழந்தை யார் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். பிரபல ரவுடி பேபி என்னும் youtube சேனலில் பிரபலமான ஆழியா தான் இப்படத்தில் நடித்துள்ளார். youtube சேனலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவரது நடிப்புக்கும், கான்செப்ட் வீடியோவுக்கும் பல ரசிகர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement