• May 03 2024

ஜனவரியில் அனுஷ்காவிற்கு டும்..டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா.?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களை நடித்து உள்ளார்.

மேலும் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திங்களில் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதன்பின்பு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா உடல் எடையை குறைக்க, படாத பாடுபட்டு வருகிறார்.


அதனால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் கடைசியாக மாதவன் உடன் சைலன்ஸ் என்ற படத்தில் தான் நடித்து இருந்தார். நடிகை அனுஷ்கா சமீபகாலமாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். அனுஷ்காவின் நடிப்பில் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் நிறைய ரசிகர்கள் அவரது வெளியாகப்போகும் படங்கள் மீது எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஏஎல் விஜய் இயக்கத்தில் மீண்டும் தமிழில் அனுஷ்கா நடித்து கொண்டிருக்கிறார்.ஏற்கனவே இதே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அனுஷ்கா தெய்வத்திருமகள் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே, அவர் பிரபாஸுடன் காதல், கல்யாணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. அத்தோடு இதுகுறித்து அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத திரிஷா, நயன்தாரா வரிசையில் அனுஷ்காவும் இருந்த நிலையில், சமீபத்தில் நயன்தாரா திருமணம் செய்து செய்துகொண்டார். அடுத்ததாக அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ள போவதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


எனினும் அந்த தகவலில் படி, அனுஷ்கா வரும் நவம்பர் மாதத்தில் நிச்சயம் செய்து, ஜனவரியில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் ஒரு நகை கடை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளாராம்.


Advertisement

Advertisement

Advertisement