• May 03 2024

ஜுன்ஸ் படத்தில் 7 அதிசயங்களும் இப்படித் தான் எடுக்கப்பட்டதா?- ஐடியா சொன்னது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் தமது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகள் உட்பட பல இண்டர்நேஷனல் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் பிரபலமான டென்னிஸ் வீரர்கள் ஆவர். பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கிய அஷோக் அமிர்தராஜ், இவர் புகழ்பெற்ற Ghost Rider: Spirit of Vengeance (2012), Walking Tall , Night Eyes மற்றும் ரஜினி நடித்த ஹாலிவுட் படமான Bloodstone, (ஷங்கர் இயக்கிய) ஜீன்ஸ் ஆகிய  100க்கும் அதிகமான படங்களைத் தயாரித்துள்ளார். 


இந்நிலையில் பிரபல சேனலில் ஜீன்ஸ் திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அஷோக் அமிர்தாராஜ், ஜீன்ஸ் திரைப்படம் குறித்தும் அதில் காட்டப்பட்ட 7 அதிசயங்கள் குறித்தும் பேசினார். அதில், “எனக்கு ஷங்கர் நல்ல நண்பர். நல்ல இயக்குநர். 7 அதிசயங்களை காண்பிக்கப்போவது குறித்து பேசும்போது அவற்றை ஒரே படத்தில் காட்டுவது பெரிய விஷயம், எனக்கு இதை ஷங்கர் எப்படி எடுக்க போகிறார் என முதலில் அவரிடம் கேட்டறிந்தேன்.


 பின்னர் ஐஸ்வர்யா ராய், பிரஷாந்த் அனைவரிடம் பேசினோம். அனைவரும் ஓகே சொல்லி பின்னர் உலகம் முழுவதுமான இந்த காட்சிகளை எடுத்தோம்.ஷங்கர் டெரிஃபிக்காக அதை செய்தார். அத்துடன் அப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் பண்ணினார். டான் பாஸ்கோ பள்ளியில் அவர் எனது ஜூனியரும் கூட. படத்தில் இசையும் உண்மையில் அருமையாக இருந்தது.” என குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement