• Feb 03 2026

பிரமாண்டமாக நடைபெறவுள்ள ஹரிஹரன் இசைநிகழ்ச்சி... இலங்கைக்கு வரவுள்ள சினிமா பிரபலங்கள்... யார்யார் தெரியுமா?

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்களின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பல சினிமா பிரபலங்கள் வருகை தரவுள்ளனர்.


இந்திய திரையுலகில் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் ஆவார். மேலும் இவருடைய குரலில் வெளிவந்த அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.


இந்நிலையில் தற்போது இலங்கையில் வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் முற்றிலும் இலவசமாக பிரமாண்ட இசை திருவிழாநடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். 


இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். SLIIT Northern UNI நடத்தும் இந்த நிகழ்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், MagicK group Sponsor செய்ய யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.


இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகை ரம்பா சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளாராம், இந்த நிகழ்ச்சியை ரம்பாவின் கணவர் தான் நடத்தவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. நடிகை ரம்பா மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த இசை திருவிழாவிற்கு வருகை தரவுள்ளனர்.

யார் யார் என பாருங்கள்...


Advertisement

Advertisement