• May 04 2024

சினிமாவிற்கு வர முதல் கூலி வேலை பார்த்த முக்கிய நடிகர்கள் யாரென்று தெரியுமா?- அடடே இவரும் இருக்கிறாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. இதில் எப்படியாவது நுழைய வேண்டும் என்று பல போராட்டங்களுக்குப் பிறகு சில பேரின் கனவுகள் நிறைவேறி இருக்கும். ஆனால் இதில் வருவதற்கு முன்னாடி அவர்கள் பண பிரச்சனையை சமாளிப்பதற்காக சின்ன சின்ன லேபர் வேலைகள், பெயிண்ட் அடிப்பது, கிளீன் பண்ணுவது போன்ற ஒரு நாள் கூலி வேலையை செய்து வந்திருக்கிறார்கள். இந்த வேலைகள் எல்லாம் செய்து வந்த பிறகு ஹீரோவான நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சூரி: இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சூரியாக பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து களவாணி, குள்ளநரி கூட்டம், வேலாயுதம், மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் நடித்து நல்ல நகைச்சுவை நடிகர் என்ற பெயரை வாங்கி வந்தார். பின்பு இப்பொழுது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஆனால் இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்னர் பெயிண்டர் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் இந்த அளவுக்கு இப்பொழுது முன்னேறி இருக்கிறார்.


சந்தானம்: இவர் தயாரிப்பாளர், நடிகர், காமெடியன் என்று பன்முகத் திறமையை கொண்டு வளர்ந்து வந்திருக்கிறார். இவருக்கு முதன் முதலில் சிம்பு, மன்மதன் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் உன் கண்ணாடி போன்று நிறைய வெற்றி படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அடுத்ததாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பல படங்களில் இப்பொழுது நடிகராக நடித்து வருகிறார். ஆனால் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி சிறு சிறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.


ஜெயசூர்யா: இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், மனதோடு மழைக்காலம், சக்கர வியூகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னாடி மிமிக்கிரி கலைஞராக பணியாற்றி அதன் பின் தான் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


விதார்த்: இவர் மைனா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு மயிலு, ஜன்னல் ஓரம், வீரம், குற்றமே தண்டனை, மகளிர் மட்டும், அன்பறிவு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் இதில் வருவதற்கு முன்னாடி கூத்துப்பட்டறை நாடகக் குழுவில் சேர்ந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்படி பார்க்கும் பொழுது நடிப்பின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.


விஜய் சேதுபதி: இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னாடி பாக்கெட் மணிக்காக கஷ்டப்பட்டு சிறு சிறு வேலைகளை செய்து வந்திருக்கிறார். பிறகு சில்லரை கடையில் விற்பனையாளர், ஹோட்டலில் காசாளர், டெலிபோன் கடை மற்றும் கூத்துப்பட்டறையில் வேலை பார்த்து இவருடைய நிதி பிரச்சனையை சமாளித்து வந்திருக்கிறார். அடுத்ததாக குடும்ப சூழ்நிலைக்காக வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து இருக்கிறார். திரும்பி இந்தியா வந்த பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து அசுர வேகத்தில் ஒரு முன்னணி ஹீரோவாக தற்போது வளர்ந்து நிற்கிறார்.


யோகி பாபு: லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக இரண்டு வருடங்கள் பணி புரிந்திருக்கிறார். பின்னர் யோகி படத்தில் அறிமுகமானார். இதன் அடையாளமாக பாபு என்ற பெயருக்கு பின்னாடி யோகி என்று மாற்றிக்கொண்டார். அடுத்ததாக வேலாயுதம், மான் கராத்தே, சூது கவ்வும், கலகலப்பு போன்ற படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்தார். பின்பு கோலமாவு கோகிலா, பன்னிக்குட்டி, மண்டேலா போன்ற படங்களில் ஒரு முக்கிய கதாநாயகனாக நடித்து ஒரு பிசியான நடிகராக மாறிவிட்டார். ஆனால் இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னாடி சின்ன சின்ன லேபர் வேலைகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார். இவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி இப்பொழுது புகழின் உச்சத்தை தொட்டியிருக்கிறார் .


Advertisement

Advertisement

Advertisement