• May 06 2024

70-க்கும் மேற்பட்ட கனிமங்களை கொண்ட கறுப்பு குடிநீர் குடிக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கிறீன் டீ, இஞ்சி டீ, தேயிலை டீ என பல வகை குடிநீரை பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம்.அதே போல பிரபலங்கள் விரும்பிக் குடிக்கும் நீர் தான் கறுப்பு குடிநீர். அந்த வகையில் கறுப்பு குடிநீர் என்பது கார நீர் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர் இது.

உடல் எடையை சரியாக பராமரிக்க இந்த கருப்பு குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரின் பி எச் அளவு ஏழுக்கு மேல் இருப்பது தோலின் வயதான தோற்றத்தையும் குறைக்கிறது. மேலும், இந்த கறுப்பு குடிநீரை உற்பத்தி செய்ய 70-க்கும் மேற்பட்ட கனிமங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. 


இவ்வளவு பயன் உள்ள இந்த கருப்பு குடிநீர் 500 மில்லி கொண்ட 6 புட்டிகளின் விலை மட்டும் 600 ரூபாய் என்று கூறப்படுகிறது. அரை லிட்டர் ரூபாய் குடிநீர் 100 ரூபாய் அல்லது அதிலிருந்து குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பரவலாக காணப்படும் கறுப்பு குடிநீர் நிறுவனம் எவோக்கஸ் ஆகும்.இந்நிலையில் இந்த கறுப்பு குடிநீர் குடிக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் மலாய்கா அரோரா, தி லெஜெண்ட் பட மலாய்கா ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் இந்த கருப்பு குடிநீரை குடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


அது மட்டும் இல்லாமல் நடிகை காஜல் அகர்வால் கூட இந்த கறுப்பு குடிநீரை குடிக்கிறார். அதற்கான வீடியோவும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement