• May 06 2024

இயக்குநர் கௌதம் வாசுதேவன் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்கப் போகின்றார் தெரியுமா?- உறுதியான புதிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த படத்தினை தெலுங்கு நடிகர்  ராம் பொத்தினேனியை வைத்து இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு


இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருப்பதோடு இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகின்றது.அத்தோடு இப்படம் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை புரியும் என்றும் நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக யாரை வைத்து புதிய படத்தை இயக்க போகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.அதாவது  ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.


இதனால் கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அது குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் ராம் பொத்தினேனி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement