• Apr 30 2024

சூர்யா 42 படப்பிடிப்பு அடுத்து நடைபெறவுள்ள இடம் எது தெரியுமா?- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் வேல்ட் பேமஸ் நடிகராக மாறியுள்ளவர் தான் சூர்யா.

இவர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக படப்பிடிப்பு இடை நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டது. இதனை அடுத்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில், சூர்யா 5 கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி இருக்கிறது. அங்கு, சூர்யா, திஷா பதானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement