• May 18 2024

தளபதி 68 படத்தின் பூஜை விழா வீடியோ எப்போது வெளியாகவுள்ளது தெரியுமா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் சோலோவாக ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 லலித்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 300 கோடி வரை வசூலித்துள்ளது. விஜய் மட்டுமின்றி லோகேஷ் கேரியரிலும் லியோ தான் மிக மோசமான படம் என விமர்சனம் செய்து வருகின்றனர். 


இது ஒருபுறம் இருக்க விஜய் தன்னுடைய 68வது படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியும் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதேவேகத்தில் ஒரு பாடல் காட்சியையும் ஷூட் செய்து முடித்துவிட்டார் வெங்கட் பிரபு.

 விஜய்யுடன் சினேகா, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், மீனாட்சி செளத்ரி, ஜெய் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விரைவில் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, முதலில் தளபதி 68 பூஜை வீடியோவை அடுத்த வாரம் வெளியிடவிருப்பதாக சொல்லப்படுகிறது.


 விஜய், பிரபுதேவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த பூஜை விழா, ரொம்பவே சிம்பிளாக தான் நடைபெற்றுள்ளது. அதனால், யுவனின் பிஜிஎம் உடன் இந்த வீடியோவை வெளியிட வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளார். லியோ ட்ரோல்கள் அதிகரித்துவிட்டதால், உடனே தளபதி 68 அப்டேட் மூலம் ரசிகர்களை கூல் செய்திட விஜய்யும் ரெடியாகிவிட்டாராம்.



Advertisement

Advertisement