• May 04 2024

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு எப்போது தெரியுமா..? வெளியான தேதி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் அப்செட்டை கொடுத்தது.இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.மேலும் இவர் இயக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும். ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுதவிர பிரபு, ஷியாம், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகின்றார்.

 வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன்மூலம் அவர் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இப்படமும் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதனால் படப்பிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார். ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4-ம் தேதி அல்லது 11-ம் தேதி நடைபெற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement