• May 04 2024

மாதவன் ரிஜெக்ட் செய்ததை சூர்யா நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் என்ன தெரியுமா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சியினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் மன்னணி நடிகர் தான் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இது தவிர விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ் பாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இவரது நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.இப்படத்தினை என்.கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக சூர்யா அருமையாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குநர் என். கிருஷ்ணன் முதலில் மாதவனை நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சில காரணத்தால் மாதவனால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் இப்படத்தில் சூர்யா நடிக்க படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement