• Apr 27 2024

மணிப்பூர் கொடுமை... பொங்கி எழுந்த ப்ரியா பவானி சங்கர்... என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மைதேயி சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்து வந்திருந்தனர். 


இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குக்கி பழங்குடியின மக்கள் போராடி வந்தபோது இரு சாராருக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் முற்றியமையைத் தொடர்ந்து குக்கி சமூகத்தை சேர்ந்த இரு பெண்களை ஆடைகளைக் களைந்து கொடுமை செய்திருந்தனர்.


இந்த விடயமானது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்குப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


அந்தவகையில் தற்போது நடிகை ப்ரியா பவானி சங்கரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் கொடுத்திருக்கின்றார். அதாவது "மணிப்பூர் பெண்கள் - சமூகம், சமூகம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்தன. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இது போன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது" எனக் கூறிக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement