• Sep 13 2024

'குக்வித் கோமாளி' ஷோவில் வென்ற பணத்தை மைம் கோபி என்ன செய்யப் போகிறார் தெரியுமா..? அந்த மனசு தான் சார் கடவுள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே 3சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் நிறைவடைந்து இருக்கிறது. 

இந்த சீசன் சிவாங்கி, விசித்ரா, கிரண், மைம் கோபி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். இதில் ஆண்ட்ரியன் மட்டும் வைல்டு கார்டு சுற்று மூலம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அதற்கிணங்க டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றுள்ளார், அதேபோன்று 2ம் இடம் ஸ்ருஷ்டிக்கும், 3ம் இடம் விசித்ராவுக்கும் கிடைத்து இருக்கிறது.


இந்நிலையில் டைட்டிலை ஜெயித்த மைம் கோபி ரூ. 5 லட்சத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இவரின் இந்த நல்ல மனசைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement