• Sep 22 2023

நடிகை பூனம் பாண்டே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து- உயிர் தப்பிய செல்லப்பிராணி- நடந்தது என்ன தெரியுமா?

stella / 6 days ago

Advertisement

Listen News!


2013ல் அன்கேனி எனும் குறும்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே. அதே ஆண்டு வெளியான பாலிவுட் படமான நாஷா படத்தில் செம ஹாட்டாக நடித்து பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளுக்கு எல்லாம் திடீரென பெரும் சவாலாக மாறினார்.

சோஷியல் மீடியாவில் கவர்ச்சியை தாண்டி அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்த பூனம் பாண்டே நாடு முழுவதும் ஓவர் நைட்டில் பரபரப்பை கிளப்பி பிரபலமானார்.


இவர் ஆபாச படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பேவை கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணமாகி ஹனிமூனுக்கு கோவா சென்று இடத்திலேயே தனது கணவர் சாம் பாம்பே தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும் அடித்து துன்புறுத்துகிறார் என்றும் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.


இந்நிலையில் நேற்று இரவு திடீரென நடிகை பூனம் பாண்டே வசித்து வந்த மும்பையில் உள்ள ராஜன் எனும் அப்பார்ட்மெண்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக நேற்று நடிகை பூனம் பாண்டே வீட்டில் இல்லை. ஆனால் அவரது வளர்ப்பு நாய் சீசர் வீட்டில் இருந்த நிலையில், தீப்பற்றிய போது அந்த செல்லப் பிராணியை நடிகை பூனம் பாண்டேவின் வீட்டு வேலைக்கார பெண் பத்திரமாக மீட்டு காப்பாற்றி உள்ளார்.


 தனது செல்லப்பிராணி சீசர் தீ விபத்தில் தப்பித்தது அறிந்த நடிகை பூனம் பாண்டே சீசரை காப்பாற்றிய பணியாளரை பாராட்டி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென எப்படி தீ பரவியது என்கிற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நடிகை பூனம் பாண்டேவுக்கு ஏதும் ஆகவில்லை என்றும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement