• Jan 19 2025

இரண்டு பேராக இருந்த நாம் மூன்று பேராக மாறிய அழகிய தருணம்- நடிகை அமலாபால் வெளியிட்ட லேட்டஸ்ட் ரொமாண்டிக் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 2010 ம் ஆண்டு வெளியான மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் அமலாபால்.தொடர்ந்து தெய்வத்  திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபல்யமானார்.

விஜய்யுடன் இவர் தலைவா படத்தில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அதே படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் காதல் ஏற்பட இருவரும் 2014 இல் திருமணம் முடித்தனர். பிரபல தமிழ் சினிமா ஜோடியாக இருந்து வந்த இருவரும் 2017-இல் பிரிந்தனர். இதன்பின்னர் சில பிரபலங்களுடன் அமலா பால் இணைத்து பேசப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் முடித்தார். கோவாவில் செட்டிலாகியுள்ள ஜெகத் தேசாயுடன், அங்கு சுற்றுலா செல்லும் போது அமலா பாலுக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.இதனை அடுத்து தற்பொழுது கணவருடன் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement