• May 04 2024

யாருமே எதிர்பாராத அளவிற்கு.. உலகளவில் 'துணிவு' படம் செய்த மாபெரும் சாதனை.. எத்தனையாவது இடம் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 


அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது.


வெளியான நாள் முதல் இன்றுவரை இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களையே பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்லாது வெளியாகிய நாள் முதலே எதிர்பாராத அளவிற்கு வசூல் சாதனையையும் நிகழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. அத்தோடு அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாகவும் மாறி இருக்கின்றது.


அதாவது இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருக்கின்றது. இந்நிலையில் துணிவு படமானது உலகம் முழுவதும் பிப்ரவரி 9-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்தது. 


அதில் வெளி வந்த நாளிலிருந்து அப்படத்தை பல நாடுகளில் பல பேரும் பார்த்து ரசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது துணிவு உலகம் முழுவதும் நெட்ப்ளிக்ஸில் இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 5வது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கின்றது. மேலும் கடைசியாக பீஸ்ட் 7வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தற்போது துணிவு படம் முறியடித்திருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement