• Sep 13 2024

துணிவு பட நடிகை மஞ்சு வாரியாரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

இவர் 1999இல் தன்னுடன் நடித்த மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து விட்டார்.தற்பொழுது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தில் நடிப்பதற்காக இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.15 வருடமாக சினிமாவில் சிறந்த நடிகை ஆக சாதித்து வரும் மஞ்சு வாரியரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 142 கோடியாகும்.மேலும் மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிகர்கள் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கிறார்கள்.


 கேரளா அரசின் நிறைய திட்டங்களுக்கு இவர் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.இன்றைய தினம் இவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement