• May 05 2024

பொன்னி நதி பாக்கணுமே..."ஈ ஆரி எச மாரி” யின் அர்த்தம் என்ன தெரியுமா..? வைரல் பதிவு இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் எனும் படத்தில்  முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படு வருகிறது.நம்ம ஊர் நாயகர்கள், நாயகிகள் சோழ வம்ச அரசர்களாகவும் இளவரசிகளாகவும் வந்து மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

 ஜெயம் ரவி, திரிஷா,கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ்  என பெரும்   நட்சத்திரபட்டாளமே இணைந்து நடித்துள்ளது.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா படமாக  உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. சில நாட்களிலேயே இந்த படம் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து விட்டது என கூறப்படுகின்றது. 

கல்கி கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ள இந்த படம் உலக ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும்  இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. படம் வெளியான நாள் முதலே சோழ வம்சத்தின் பேச்சு தான் சமூக ஊடகம் முழுவதும்.

ராஜராஜன் சோழன் குறித்தும் அவரது வாழ்க்கை பதிவுகள் குறித்தும் வீடியோக்களும் ரீல்ஸுகளும் தொடர்ந்து வெளியான வண்ணம் தான் இருக்கிறது.எனினும்  அந்த வகையில் தற்போது ஆர் ஜே அஞ்சனா என்பவர் பொன்னி நதி பாடலில் "ஈ ஆரி எச மாரி" என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி உள்ளார். ஈ என்றால் வில், ஆரி என்றால் வீரன், எச என்றால் இசை, மாரி என்றால் மழை அதாவது  "வில் வீரனின் இசை மழை" என  அழகாக விளக்கம் கொடுத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement