• Feb 04 2023

அம்மன் படத்தில் நடித்த ஜண்டா வில்லன் எப்படி இறந்தார் தெரியுமா?- கடைசில இப்படித் தான் இருந்தாரா?

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் தான் நடிகர் ராமி ரெட்டி. இவர் வில்லனாகவும் காமெடியனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.திரைபடங்களில் நடிக்க வருவதற்கு முன்பு, ரெட்டி எம். எஃப் டெல்லியில் பத்திரிகையாளராக பணியாற்றினார்.

தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் தமிழில் நாடு அதை நாடு ,தடயம் ,துள்ளித்திரிந்த காலம் ,அம்மன் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.


இவரை நல்ல வில்லனாக அறிமுகப்படுத்திய படம் என்றால் அம்மன் தான். தெலுங்கு ரீமேக்கான இப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், ராமி ரெட்டி, குழந்தை நட்சத்திரம் சுனைனா என பலர் நடித்திருந்தனர். 

சாமி படம் என்றாலே இப்படம் தான் மக்களுக்கு முதலில் நியாபகம் வரும், அந்த அளவிற்கு இப்படம் பக்திமயமாக இருக்கும்.இப்படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி. ஜண்டா என இவர் கூறும் வசனங்கள் மக்களிடம் ஹிட் தான். இவர் உடல் எடை மெலிந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


குண்டாக இருந்த இவர் என்ன இப்படி ஆகிவிட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஷாக்கிங்காக பார்க்க கடைசியில் அவர் இப்போது உயிரோடு இல்லை. 2011ம் ஆண்டு தனது 52 வயதில் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Advertisement

Advertisement

Advertisement