• Apr 23 2024

நடக்கவே முடியாமல் நடக்கும் நடிகை சமந்தாவின் வீடியோ...கலங்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும்  கலங்கியுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி. 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்தோடு கடைசியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார்.

தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அத்தோடு  தெலுங்கில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் யசோதா படம் வெளியானது.எனினும்  தற்போது ஷகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆரத்யா என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. இவ்வாறுஇருக்கையில் அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா.

இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சமந்தா, யசோதா படத்தின் புரமோஷன்களின் போதுதான் தனது நோய் குறித்து வெளிப்படுத்தினார். ஒரு சில நாட்கள் படுக்கையில் இருந்து எழவே முடியாத அளவுக்கு உடல் வலி இருக்கும் என வேதனையுடன் தெரிவித்தார் சமந்தா.அத்தோடு  தன்னுடைய இந்த நிலையில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இவ்வாறுஇருக்கையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும் இதனால் ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.

இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென்கொரியாவுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தா நாடு திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் நடிகை சமந்தா நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.மேலும்  இதில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துள்ள சமந்தா கண்களில் கூலர்ஸ், கைகளில் ஹேண்ட் பேக் என நடந்து செல்கிறார். இந்த வீடியோவில் சமந்தாவின் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமோ சிரிப்போ இல்லை.

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அக்கடா என வாடிப்போன முகத்துடன் சோகமே உருவாக பொறுமையாக நடந்து செல்கிறார். தன்னோடு செல்பி எடுக்க ரசிகர்களை அனுமதித்து அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் சமந்தா. ஆனால் அப்போதும் பெயருக்கு கூட சிரிக்க வில்லை. அத்தோடு யாருடைய முகத்தையும் ஏறிட்டு பார்க்கவில்லை. இந்த வீடியோவில் சமந்தா பழைய சமந்தாவாக இல்லை. அவருடைய உற்சாகமும் சிரிப்பும் கொஞ்சம் கூட இல்லை. சமந்தாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்மு சம்முவா இது? என்ன ஆச்சு என கேட்டு கலங்கி வருகின்றனர்.

அதேநேரம் நிச்சயம் முன்பை விட ஸ்ட்ராங்கராகதான் சமந்தா நாடு திரும்பியிருப்பார். இதனை அடுத்தடுத்து படப்பிடிப்பில் பங்கேற்று தான் பேக் டூ ஃபார்ம் என்பதை நிரூபிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான பாலிவுட் படங்களில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் வெறும் வதந்திதான் என்றும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement