• May 09 2024

சிகிச்சைக்கு முன் சரத்பாபு எப்படி இருந்தார் தெரியுமா...? எலும்பும் தோலுமாக மாறி பார்ப்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்த புகைப்படம்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமாகி இருக்கிறார். 


அதாவது இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவருடைய சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என உடல் உறுப்புகள் நோய் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தததால் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் பெற்று வந்திருந்தார்.


இவ்வாறாக மருத்துவனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தனது 71வயதில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். சரத்பாபு சிகிச்சை பெற்று வந்த போது அவரது சிகிச்சை புகைப்படமோ அல்லது வேறு எந்த விதமான புகைப்படமோ இதுவரை வெளியாகவில்லை. 


இப்படி ஒரு நிலையில் சரத்பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement