• Jun 04 2023

உண்மை தெரிந்தும் போதை தலைக்கேறி கண்மணியிடம் சிக்கிக் கொண்ட சித்ரா- வெற்றியின் திருமணத்தை நினைத்து குழப்பத்தில் இருக்கும் அபி

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும் இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது விஜியம்மா சித்தாவிடம் அபி கல்யாணம் பண்ணிக்கல. வருண் அவளோட சகோதரம் மாதிரி சத்தியமா சொல்லுறேன் அபி இன்னும் கல்யாணம் பண்ணல.கண்மணி எதற்கு பொய் சொன்னா என்று தெரில என சொல்ல, சித்ரா அப்போ கண்மணி வெற்றியைக் கல்யாணம் பண்ணத்தான் இந்த பிளான் எல்லாம் போட்டாளா என்று சொல்கின்றார்.


இதனால் விஜி இந்த விஷயத்தை உடனடியாக வெற்றிக் கிட்ட சொல்லி ஆகணும் என்று சொல்ல சித்ரா அதை நானே சொல்லிக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்கின்றார். அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வரும் விஜி வருணிடம் அபி வெற்றிக்கு கல்யாணம் என்பதால் கொஞ்சம் கவலையா இருக்கிறா, ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறா என்று சொல்ல வருண் அபியிடம் சென்று இது பற்றி பேச அபி சமாளித்து விடுகின்றார்.

பின்னர் மண்டபத்துக்கு வரும் சித்ரா தனது கணவரிடம் வெற்றி எங்கே அவர் கிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும் சொல்லல என்றால் தலையே வெடித்திடும் என்று சொல்லி போதைப் பொருள் கலந்த பீடாவைச் சாப்பிடுகின்றார். அதனைச் சாப்பிட்டு போதை தலைக்கேறியதும் தனது கணவரிடம் கண்மணி சொன்னது பொய் அபி இன்னும் கல்யாணம் பண்ணிக்கல என்று சொல்கின்றார்.


இதைக் கேட்ட அன்பு இவ கல்யாணத்தை குழப்பிடுவாள் போல இருக்கே என சித்ரா சொன்னதை நம்பாமல் அவரைப் போய் துாங்க சொல்ல சித்ரா வரும் வழியில் கண்மணியைக் கண்டு வெற்றியை கூட்டிட்டு வா அவர் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் என்று சொல்ல கண்மணி என்ன சொல்லப் போறீங்க என்று சொல்ல உன்னைப் பற்றித்தான் சொல்லணும் என்று சொல்ல சித்ராவை ஒரு ரூமுக்குள் கூட்டிக்கொண்டு வந்து அடைக்கின்றார். பின்னர் சித்ராவை அடிக்க கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement