• Mar 19 2024

பத்துத் தல படத்திற்காக ப்ரியா பவானி சங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?- சாயிஷாவுக்கு அதிகமா இருக்கும் போல இருக்கே

stella / 11 months ago

Advertisement

Listen News!


மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்பில் முதிர்ச்சி இருந்ததை போலவே தொடர்ந்து அவர் தேர்வு செய்யும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் செம மெச்சூரிட்டியை காட்டி நடித்து வருகிறார்.

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன் நடித்துள்ள பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கமர்ஷியல் படத்தில் ஹீரோயின் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும் என ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலேயே தனது போர்ஷன் படத்தில் எப்படி இருக்கும் என்கிற லேசான எச்சரிக்கையை கொடுத்து விட்டார்.


 இந்நிலையில், இந்த படத்துக்கு அவர் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தனது சம்பளத்தை மொத்தமாக கோடிகளில் இன்னமும் அவர் அதிகரிக்கவில்லை என்றே கூறுகின்றனர். பத்து தல படம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கே 5 கோடி ரூபாய் சம்பளம் என்றும் படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என்றும் ஹீரோயினாக நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பத்து தல படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகர் ஆர்யாவின் மனைவிக்கு மட்டும் அதிகபட்சமாக 40 லட்சம் வரை சம்பளம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், சாயிஷா கடைசியாக சமீபத்தில் தான் கமிட் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இப்படியொரு சம்பளம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement