• May 04 2024

சந்திரமுகி 2 படத்திற்காக கங்கனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், சந்திரமுகி இப்படத்தில்  ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். வெளியாகி  ஹிட் கொடுத்த இப்படத்தின்  இரண்டாம் பாகம் சந்திரமுகி 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தையும் இயக்குநர் பி.வாசு இயக்கியிருக்கிறார். 

 
சந்திரமுகி 2  செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படக்குழு திடீரென தள்ளி வைத்துள்ளது. இதன் வெளியீடு செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்திற்காக கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். அதிலும் இப்படத்தின் ஹீரோ ராகவ லாரன்ஸ் காட்டிலும் கங்கனா ரனாவத் அதிகம் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள்  வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement