• May 11 2024

இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் கோப்ரா திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் விக்ரம். தனது நடிப்பினாலும் இளமையான அழகினாலும் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா.

கிட்டத்தட்ட 8 கெட்டப்புகள் போட்டு விக்ரம் நடித்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.இப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்ததோடு இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார், 


மேலும் இப்படத்தில் கதாநாயகியாக கே ஜி எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி நடித்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எல்லாம் அமோகமாக நடந்தது.

இப்படம் இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார நாட்களில் படத்திற்கான வசூல் கொஞ்சம் அதிகமாகும் என கூறப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement