• Mar 29 2025

நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சினேகாவை புன்னகை அரசி என கொண்டாடி வருகிறார்கள். சிரிப்புக்கு பேர்போன நடிகை சினேகா விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் வழக்கம் போல் வரிசையாக படங்கள் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.


தற்போது கைவசம் விஜய்யின் Goat திரைப்படம் உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க. புன்னகை அரசியாக பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை சினேகா, ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு இருக்கிறது. நடிகை சினேகா மற்றும் பிரசன்னா Audi A6 - ரூ. 70 லட்சம் மற்றும் Mercedes-Benz B-Class B 180 - ரூ. 35 லட்சம் மதிப்புள்ள கார்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement