• May 12 2024

லவ்டுடே படத்தில் நடிப்பதற்கு நடிகை ராதிகா எவ்வளவு சம்பளம் பெற்றார் தெரியுமா?- அதிரடியாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே. கடந்த 4ம் திகதி வெளியான இப்படத்தினை பிரதீப் ரங்கநாதனே இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

இப்படத்தில் கதாநாயகியாக இவானா என்பவரும் நடித்திருந்தார்.மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில்  ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா நடித்திருந்தனர்.லவ் டுடே திரைப்படம் தமிழ் நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், படத்தை தெலுங்கு மொழியிலும் ரிலீஸ் செய்தனர்.


AGS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 5 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்ட லவ் டுடே, தற்போது வரை 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இந்நிலையில் லவ் டுடே படத்திற்காக ராதிகா சரத்குமார் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் இப்படத்தின் வெற்றியை தற்பொழுதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு பிரதீப் இதற்கு முதல் பல குறும்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement