• May 04 2024

லியோ திரைப்படம் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் ஒளிபரப்பப்படவுள்ளது தெரியுமா?- செம குஷியில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் இந்த மாதம் 19ம் தேதி மிகவும் பிரமாண்டாக வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

கடந்த ஐந்தாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளும் முடிவடைந்துள்ளன.


சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.இந்நிலையில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதில் முதல் காட்சி 4 AM  அல்லது 9 Am  என்ற குழப்பம் இன்னும் நீடிக்க, எது எப்படியோ ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் கிடைத்துவிட்டது என்ற ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement