• Jan 19 2025

12,000 பேருடன் முட்டிமோதி ஆடிஷனில் தேர்வான குயில்கள் எத்தனை தெரியுமா? ரணகளமான சரிகமப..

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒன்றாக காணப்படுவது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிற்கு தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றன.

அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் கார்த்திகை தீபம், அண்ணா, மாரி, முத்தழகு போன்றவை காணப்படுகின்றன.

அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோர்களின் ஒன்றுதான் சரிகமப நிகழ்ச்சி. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது.

இறுதியாக இடம்பெற்று முடிந்த சரிகமப லிட்டில் கிங்ஸ் நிகழ்ச்சியில், ஈழத்து குயிலான கில்மிஷா வெற்றி கோப்பையை தனதாக்கி கொண்டார். அத்துடன் அவருக்கு 10 லட்சம் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளது என ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வியக்கவைக்கும் போட்டியாளர்களின் தேர்வு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதாவது, 75 நாட்கள் பல்வேறு இடங்களில் விதவிதமாக நடத்தப்பட்ட ஆடிஷன்களில் மொத்தமாக 12000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதிலிருந்து 50 திறமையான போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தெரிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement