• May 18 2024

லியோ திரைப்படம் வெளியாகிய 10 நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


இந்நிலையில், 'லியோ' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததோடு  ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 461 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், லியோ படம் வெளிவந்து 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 475 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement