• May 04 2024

சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பிற்கும், நகைச்சுவை கலந்த பேச்சிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருக்கின்றார்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'பிரின்ஸ்' திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மனதைப் பூர்த்தி செய்யவில்லை. இதை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன்' என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 


இப்படத்திற்கு பின்னர் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமல்லாது மற்றோர் புதிய படத்தினையும் கைவசம் வைத்துள்ளாராம். 


இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பள விபரம் வெளியாகி இருக்கின்றது. அதாவது ரூ. 27 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. அதாவது முதலில் ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சிவகார்த்திகேயன் கேட்டுள்ளாராம். ஆனால், இறுதியில் ரூ. 27 கோடி சம்பளம் தான் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement