• May 04 2024

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் நான் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!



விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று ரிலீஸானது. 

விஷாலின் ஆக்டிங் சூப்பர் என்றால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சூறாவளியாக சுழன்று அடித்துள்ளார். எஸ்ஜே சூர்யாவின் நடிப்பில் தியேட்டரே அல்லோலப்பட்டுள்ளது. முக்கியமாக இடைவேளை சீன், சில்க் ஸ்மிதா வரும் காட்சி என கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்சர் விளாசியுள்ளார் எஸ்ஜே சூர்யா.


இந்நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

இது விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பு என்கின்றனர். இனி வரும் நாட்களில் இந்த வசூல் இரட்டிப்பு ஆகும் என்றும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement