• May 07 2024

5நாட்களைக் கடந்து... குறையாத வசூலில் மாஸ் காட்டும் 'சந்திரமுகி-2'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) சமீபத்தில் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


இப்படமானது பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து வருகின்ற அதே நேரத்தில் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.


இருப்பினும் இப்படத்திற்குப் போட்டியாக வெளிவந்த ஜெயம்ரவியின் இறைவன் மற்றும் சித்தார்த்தின் சித்தா ஆகிய இரண்டு படங்களையும் ஓரங்கட்டி லாரன்ஸின் 'சந்திரமுகி-2' வசூலில் முதலிடத்தில் நிற்கின்றது.


அந்தவகையில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி 5நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 30 முதல் 35 கோடி வரை வசூலினைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement