• Apr 30 2024

மாமன்னன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் எத்தனை கோடி தெரியுமா?- வெளியாகிய தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 29ஆம் தேதி (நாளை) ரிலீஸாகவிருக்கிறது.

 உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


நாளை உலகளவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, மாமன்னன் திரைப்படம் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூலில் மட்டுமே சுமார் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என பார்க்கப்படுகிறது.இதனால் படம் வெளியாகிய பின்னரும் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement