• May 06 2024

ஹன்சிகாவின் கணவர் அவரை செல்லமாக எப்படி அழைப்பார் தெரியுமா?- அவரே சொன்ன Nick Name ரகசியம்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். தமிழில் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.


ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகியது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ, பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாகிறது. Love Shaadi Drama என இதற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், டீசரும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.


இதனிடையே, நடிகை ஹன்சிகா மோத்வானி  பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், விரைவில் ரிலீஸ் ஆகப் போகும் தனது திருமண வீடியோ குறித்தும், கணவர் குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது தனக்கும் கணவர் சுயலாகி சோஹேலுக்கும் இடையே உள்ள Nick Name குறித்தும் பேசி இருந்த ஹன்சிகா, "நான் சோஹேலை 'Babe' என்று அழைப்பேன். அவர் என்னை ஹன்சு என்றும் ரவுடி என்றும் அழைப்பார்" என தெரிவித்த ஹன்சிகா சோஹேலை விட தான் தான் அவரை அதிகம் ஜாலியாக ஏதாவது கலாய்த்து கொண்டிருப்பதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement