• Apr 27 2024

புஷ்பா மற்றும் கேஜிஎப் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசிய நடிகர் யார் தெரியுமா?- வைரலாகும் பிரபலத்தின் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான் புஷ்பா, கேஜிஎப்2. இப்படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசியவர் தான் ஆர்ட்டிஸ்ட் பி.ஆர்.சேகர். இது தவிர இவர் 83, தோனி, பாகுபலி, ஆகிய படங்களுக்கும் பேசியிருக்கின்றார்.

அந்த வகையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறிய பதில்: கே.ஜி.எப். 2 படத்தில் நான் டப்பிங் பேசுவதற்கு வாய்ப்பளித்த Hombale நிறுவனத்திற்கும், இயக்குநர் பிரசாந்த நீல் மற்றும் நடிகர் யாஷ்க்கும் எனது மனமார்ந்த நன்றி. 777சார்லி படத்தில் கதாநாயகன் தர்மாவிற்கு டப்பிங் பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. மேலும் குரல் என்பது பெற்றோர்கள் போட்ட பிச்சை நான் முடிந்தவரைக்கும் கதாநாயகனுடைய ஒரிஜினல் குரலில் பேசுவதற்கு முயற்சி செய்வேன். அப்படி முயற்சி செய்யும்போது சில படங்கள் சரியாக அமைந்து விடும். அப்படி அமைந்த படங்கள் தான் 83, தோனி, பாகுபலி, புஷ்பா, கேஜிஎப். நான் பேசிக்கா தியேட்டர் ஆர்டிஸ்ட். ரசிகனாக நான், ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்பொழுது எதை செய்தால் நன்றாக இருக்குமோ அதை செய்வேன். தமிழ் ரசிகர்களுக்கு சில வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அழகாக இருக்கும். ஒரு சில வார்த்தைகளை பேசினால் போதும், பஞ்ச் தானாக வந்து விடும் என்றார். தமிழ் ரசிகர்கள் நல்ல வசனங்களை , மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்ல கதாபாத்திரங்களை ,மொழி ஆளுமையுடன் அழகாக கொடுப்பதை தான் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். முடித்த வரை அதை நான் செய்து வருகிறேன் என்று கூறினார்.

அடுத்த கேள்வியாக : டப்பிங் துறையில் நீங்கள் யாரை ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ளவீர்கள்?

பதில்: எங்களுக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும், அந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட், மீடியா போன்றவற்றின் வளர்ச்சி இல்லாமல் பல பேர் டப்பிங் துறையில் பல சாதனைகள் புரிந்து விட்டனர். அப்பொழுது டப்பிங் செய்வதெல்லாம் லூப் சிஸ்டத்தில் தான். அதாவது ஒரு சீனை 5 லூப் ஆக கட் செய்வார்கள். ஒரு லூப்பில் 6 ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள். 6 ஆர்ட்டிஸ்ட்டும் ஒரே மாதிரி டப்பிங் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 70 தடவை ரீடேக் வரும். அக்காலக்கட்டத்தில் கதாநாயகனுக்கு டப்பிங் கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அவர்களுடன் எங்களை ஒப்பிடும்பொழுது, நாங்கள் ஒன்றும் சாதனை புரியவில்லை. எனது சீனியர்ஸ் எல்லாமே ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ள ஆசை படுகிறேன் என்று கூறினார்.

அடுத்த கேள்வி: தமிழில் உங்களுக்கு சந்தேகம் வந்தால் யாரை தொடர்பு கொள்வீர்கள்?

பதில்: எனக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்னவென்றால் எனது தந்தை எனக்கு ஆசிரியராக அமைந்தது. அவருடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். மேடை நாடகங்களில் மூலமாக நான் தமிழ் கற்றுக் கொண்டேன். கடவுள் புண்ணியத்தால் தற்போது என்னை சுற்றியிருக்கும் டயலக் ரைட்டர் விஜயகுமார், மதன்கார்க்கி ஆகியோர் இருப்பதால் சந்தேகம் கேட்பது எளிது. தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதை விட, என்னுடைய அடையாளம் தமிழ் தான் என்று கூறுவதே சிறந்தது. இந்திய மொழிகளில் அனைத்திலும் டப்பிங் பேசியுள்ளேன்.இருந்தாலும் தமிழ் தான் எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் கூறினார்.

கேள்வி: டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களில் உங்களை கவர்ந்தவர் யார்?

பதில்: நான் எப்போது டப்பிங் பேச ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. ஆனால் சிறு வயதில் பேசினேன். மிருகங்களை வைத்து "எங்களையும் வாழவிடுங்கள்" என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் நான் குட்டி யானைக்கு டப்பிங் கொடுத்துள்ளேன்.மறக்க முடியாத டப்பிங் என் குழந்தை பருவத்தில் இது தான் . டப்பிங் துறைக்கு தற்போது இளைய தலைமுறையினர் நிறைய பேர் வந்து சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக அவென்ஞர்ஸ் படத்தில் நிறைய பேர் டப்பிங் செய்துள்ளனர். "ஸ்குய்ட் கேம்" படத்தில் வரும் தாத்தா ஒருவருக்கு நடிகர் நாசர் டப்பிங் பேசியது பார்த்து பிரமித்து போனேன் அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் என்றும் இன்னும் பல சுவாரஜியமான விடங்களை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement