சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ படத்திற்கு ராணுவத்திலிருந்து கண்டனம் வந்துள்ளதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர்
கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’அமரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள
நிலையில் இந்த படத்தின் டீசர்
சமீபத்தில் வெளியாகிய இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் மறைந்த
முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கு இந்திய
ராணுவம் கூடுதல் முக்கியத்துவம் தந்தது என்பதும் காஷ்மீரில் சில இடங்களில் படப்பிடிப்பு
நடத்த ராணுவம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர்
சமீபத்தில் வெளியான நிலையில் அதில் சிவகார்த்திகேயன் ஒரு கெட்ட வார்த்தை
பேசுவது போன்ற வசனம் இருப்பதை பார்த்து இந்திய ராணுவம் அதிருப்தி அடைந்ததாகவும் இந்த அதிருப்தியை மெயில்
மூலம் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் இருந்து இப்படி ஒரு அதிருப்தி மெயில்
வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன் உடனே ராஜ்குமார் பெரியசாமியை
அழைத்து அந்த காட்சியை உடனடியாக
நீக்குமாறு அறிவுறுத்தியதோடு இந்திய ராணுவத்திற்கு ஒரு மன்னிப்பு கடிதம்
அனுப்பவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காட்சி டீசரில் இருந்து நீக்கப்படும் என்றும் படத்திலும் இந்த காட்சி இருக்காது
என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள
இந்த படம் விரைவில் வெளியாக
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!