• Apr 27 2024

மாமன்னன் படத்தின் முக்கிய பணியை ஆரம்பித்த வடிவேலு- அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும்  திரைப்படம்'மாமன்னன்'.மேலும் உதயநிதி ஸ்டாலின் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி விட்டதால் மாமன்னன் படத்துடன் நடிப்பிற்கு முழுக்குப் போடவுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகள் மும்முறமாக துவங்கி துவங்கியுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளதாக நடிகர் வடிவேலுவின் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.


ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியான பின்னர் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement