• Apr 15 2026

எந்தப் போராட்டத்தில மக்களுக்காக நின்னீங்க? - விஜய்யை சரமாரியாக கேள்வியெழுப்பிய சேரன்!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருத்துக்களை இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ளார். அவர், தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


சேரன் தனது கருத்தில், “எந்த போராட்டத்தில் மக்களுக்காக நின்று இருக்கீங்க? இங்க இரண்டு கட்சிகளுக்குத் தான் போட்டி என்று சொல்ல மனசாட்சி இல்லையா? உழைப்பை மதியுங்கள். உங்கள் கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் அல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலில் உண்மையான ஈடுபாடு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, “மக்களிடம் வீரவசனம் பேசுவதற்குப் பதிலாக, உங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெளிவாக எடுத்துரையுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சேரன் கூறிய இந்த கருத்துகள், நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகளை நோக்கி விடுக்கப்பட்ட நேரடி விமர்சனமாக பார்க்கப்படுகின்றன.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் சேரனின் கருத்துகளை ஆதரிக்க, மற்றொரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement