• May 06 2024

மாமன்னன் படத்தில் இருக்கும் இந்த பெரிய மிஸ்டேக்கை கவனிச்சீங்களா?- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய மாமன்னன் படத்திற்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் இரு விதமான எதிர்ப்பு கருத்துகளும் எழுந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நரிக்குறவ இனத்தை சேர்ந்தவராகவும் ரிக்‌ஷாக்காரனாகவும் படகோட்டியாகவும் எம்ஜிஆர் நடித்து அரசியலில் எப்படி ஒரு பெரிய இடத்தை பிடித்தாரோ, அதே போல பன்றிக் குட்டிகளை வைத்து பட்டியலின மக்களின் அரசியலை பேசி மாரி செல்வராஜ் உதயநிதியை எம்ஜிஆர் ஆக்கும் முயற்சியில் இந்த படத்தை எடுத்துள்ளாரா? என்கிற கடுமையான வாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.


உதயநிதியை தவிர வேறு ஹீரோவை வைத்து எடுத்திருந்தால், நிச்சயம் இப்படியொரு விமர்சனம் வந்திருக்காது. உதயநிதியும் இந்த கதையில் ஒத்துக் கொண்டு நடித்ததும் தனது அரசியல் ஆதாயத்துக்காகத் தானே தவிர சமூக அக்கறைக்காக அல்ல என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

படத்தின் முதல் பாதி முழுவதும் வேகமாக சென்ற நிலையில், இரண்டாம் பாதி படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறி உள்ளது. தேர்தல் களத்தில் சந்தித்து ஜெயித்து வில்லனை அடக்க நினைக்கும் கதையில் அதற்கான வலுவான காட்சிகளோ திரைக்கதையோ இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை. மாமன்னன் வடிவேலு எப்படி தேர்தலில் வெற்றிப் பெறுகிறார் என்றே தெரியவில்லை. வடிவேலுவை ஜெயிக்க விடக் கூடாது என்பதற்காக பகத் ஃபாசில் செய்யும் காலில் விழும் மேட்டரும் வேறு ஒரு அரசியலை பேசும் காட்சியாகவே முடிகிறதே தவிர்த்து பகத் ஃபாசில் கதாபாத்திரத்துக்கு எந்தவொரு பலனையும் கொடுக்கவில்லை.


 முதலமைச்சரிடமே முறைத்து விட்டு கட்சியில் இருந்து விலகும் பகத் ஃபாசில் உதயநிதி குடும்பத்தை எதுவுமே பண்ணாமல் அமைதியாக செல்வது எல்லாம் வேடிக்கை.பகத் ஃபாசிலின் மனைவி கதாபாத்திரம், பகத் ஃபாசில் சேறும் மறுமலர்ச்சி சமூக நீதி சமத்துவ கட்சி தலைவர் விஜயகுமார் என பல கதாபாத்திரங்களுக்கு பெரிய முக்கியத்துவமே கொடுக்கவில்லை. 

சுனில் கதாபாத்திரத்தை வைத்து அதிலும், ஆதிக்க சாதி மனநிலையை கொண்டவர்களை திருந்தவும் வருந்தவும் வைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் மேலும், அவர்களை ஆத்திரப்படுத்தும் மன நிலையிலும் பட்டியலின மக்கள் மற்ற சாதியினரை பார்த்தாலே அவர்களின் மன நிலை அப்படித்தான் இருக்கும் என்கிற விஷ விதையையும் ஆழமாக விதைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ்.


 "போங்கடா போய் புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா" என்று சொன்ன தேவர்மகனை விமர்சித்த மாரி செல்வராஜ் "போங்கடா அடிமுறை கத்துக்கிட்டு அடிங்கடா என்றும் அரசியல்வாதிகளை வைத்து படமெடுத்து பிழைத்துக்கோங்கடா" என்றும் சொல்வதாகத்தான் இந்த மாமன்னன் இருக்கு என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement