• May 10 2024

விருமன் திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?- குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் பின்னர் கார்த்தி கிராமத்து கதைக்களத்தில் நடித்த திரைப்படம் தான் விருமன். இப்படத்தில் கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்திருந்தார்.இது தான் இவருடைய முதல் படம் என்பதும் முக்கியமாகும்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.அத்தோடு இப்படம் நேற்றைய தினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.


மேலும் இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 8 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேலும் வசூலித்தது.சென்னை பொறுத்தவரையில் படம் முதல் நாளில் ரூ. 56 லட்சம் வசூலித்திருக்கிறதாம். இதனால் படக்குழுவர் செம குஷியில் உள்ளனராம்.

அத்தோடு கார்த்தி இது தவிர பொன்னியின் செல்வன் சர்தார் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இப்படங்களும் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது என்பதும் குறிப்படத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement