• May 03 2024

தன்னுடைய சொத்தை வழங்கினாரா ‘தல’ தோனி; இன்ப அதிர்ச்சியில் மிதக்கும் யோகிபாபு- வீடியோவும் வெளியிட்டு நன்றி தெரிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய பொம்மை நாயகி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது கிரிக்கெட் வீரர் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீடு’ என்கிற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவராகவும் இருக்கின்றார். 


ஷூட்டிங் சமயத்தில் கூட ஓய்வு கிடைத்தால் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் யோகிபாபு. இதுதவிர நண்பர்களுடன் சேர்ந்து இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆவது உண்டு.இவர் 

 கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வியந்து போன நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.


 ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அந்த பேட் உடன் வீடியோ ஒன்றை எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த யோகிபாபு விஜய்க்கு நன்றி தெரிவித்து இருந்தார். தளபதி விஜய்யை தொடர்ந்து தற்போது ‘தல’யும் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தல என்றால் அஜித் அல்ல கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ தோனி தான் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார். அதுவும் தான் விளையாடிய பேட்டை யோகிபாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தோனி போன்ற லெஜண்ட்டிடம் இருந்து கிரிக்கெட் பேட் பரிசாக கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்த யோகிபாபு, வீடியோ வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement