• Sep 25 2023

ராம்சரண் மகளுக்கு அல்லு அர்ஜுன் இப்படியொரு கிஃப்ட் கொடுத்துருக்காரா? என்னன்னு நீங்களே பாருங்க..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா இருவரும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டாலும், உடனடியாக குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் கருமுட்டையை உறைய வைத்து உரிய காலத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவை எடுத்தனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு இருவரும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்த நிலையில், உபாசனா கர்ப்பமானார். கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ராம்சரண் பெண் குழந்தைக்கு அப்பாவானார்.

டோலிவுட் திரையுலகமே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் போலத்தான். ராம்சரணின் உறவினரான அல்லு அர்ஜுன் தனக்கு மருமகள் வந்து விட்டார் என குழந்தை பிறந்த செய்தி அறிந்ததுமே தனது மனைவி சினேகா ரெட்டியுடன் மருத்துவமனைக்கு சென்ற வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிரத்யேகமாக க்ளின் காரா பெயர் மற்றும் பிறந்த விவரங்கள் பொறிக்கப்பட்ட தங்கத்திலான ஸ்லேட் ஒன்றை ராம்சரணின் மகளுக்கு பரிசாக வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக அம்பானி ராம்சரண் மகளுக்கு ஒரு கோடி மதிப்பிலான தங்கத் தொட்டிலை பரிசாக வழங்கி இருந்தார். இந்நிலையில், பல லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்லேட்டை அல்லு அர்ஜுன் கிஃப்ட்டா கொடுத்திருக்கிறாராம்.என தகவல் பரவி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement