• May 02 2024

நடிகர் விஜய் மற்றும் பகத் பாசில் இணைந்து இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்களா?- திடீரென வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் விஜய். இவரது  படங்கள் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வருவதோடு வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகின்றார்.இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.

இருப்பினும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.இதனை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்று கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் பகத் பாசில் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். மலையாளத்தில் டாப் ஹீரோ, நடிப்பின் ராட்சசன் என்ற பெயரே இவருக்கு இருக்கிறது. தமிழில் சமீபத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


அடுத்து லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மற்றும் பகத் பாசில் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு நகைக்கடை விளம்பரத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அந்த வீடியோ இப்போது டுவிட்டரில் வலம் வருகிறது. இதனை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement