• May 03 2024

மீண்டும் துவங்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..வைராலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமான மாஸ் நடிகர் தான் விக்ரம்.

விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தின் 90% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் விக்ரமிற்கும், கவுதம் மேனனிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார்.

எப்போது தான் இந்த பிரச்சனை முடிவு வந்து, படம் தயாராகி வெளியாகுமோ என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரச்சனை முடிந்து, மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பம் ஆகியுள்ளது.

இயக்குநர் கவுதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்து 'நட்சத்திரங்கள் மீண்டும் சேர்கிறது' என பதிவை இட்டுள்ளார்.

அத்தோடு மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படம் உருவாகவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement