• May 05 2024

500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் தனுஷின் ‘வாத்தி' படம் : வெளியானது தகவல்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “வாத்தி”. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா மேனன் நடித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்  ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்லலாம். டிரைலரும் கூட யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த வாத்தி திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிக்கெட்டுக்கான முன் பதிவும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

இந்நிலையில், வாத்தி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

அதுமட்டுமன்றி முதல் நாள் முதல் காட்சி பிப்ரவரி 17-ஆம் தேதி காலை  8 மணிக்கு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement