• May 06 2024

அதிரடி காட்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம்-100கோடியை எட்டியுயுள்ளதா..? வெளியானது முழு விபரம்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட்,ஹாலிவுட்  என பல படங்களில் கெமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான் அட்ராங்கி ரே, தி கிரே மேன்.இப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மாத்திரமல்லாது வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் குட்டி ,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக கைகோர்த்து உருவாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். 

அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது இத் திரைப்படம் .

இந்த படம் உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

மேலும்  இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதுவரை வெளியான தனுஷின் திரைப்படங்களை விட இப்படம் நல்ல குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் வெளியாகி 15 நாட்கள் முடிந்துள்ளது, மொத்தமாக இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.ஆம், இப்படம் மொத்தமாக ரூ. 88 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.





Advertisement

Advertisement

Advertisement